/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கரூர் - பல்லடம் வழித்தடத்தில் நாளை போக்குவரத்தில் மாற்றம்
/
கரூர் - பல்லடம் வழித்தடத்தில் நாளை போக்குவரத்தில் மாற்றம்
கரூர் - பல்லடம் வழித்தடத்தில் நாளை போக்குவரத்தில் மாற்றம்
கரூர் - பல்லடம் வழித்தடத்தில் நாளை போக்குவரத்தில் மாற்றம்
ADDED : பிப் 26, 2024 07:19 AM
ஈரோடு : கரூர் - பல்லடம் வழி தடத்தில், நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில், நாளை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக ஈரோடு மாவட்ட போலீசார், போக்குவரத்தில் நாளை மாற்றம் செய்துள்ளனர்.
இதன்படி கோவையில் இருந்து கரூர், திருச்சி,திண்டுக்கல்,மதுரைக்கு செல்லும் கன்டெய்னர், டேங்கர் லாரிகள் மற்றும் அதிக உயரமான பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மட்டும் பெருந்துறை வழியாக திண்டல் ரிங்ரோடு வழியே ஆணைக்கல்பாளையம், முத்துகவுண்டன்பாளையம், லக்காபுரம், மொடக்குறிச்சி, விளக்கேத்தி, சிவகிரி,தாமரைபாளையம், சாலை புதுார் வழியே கரூர் செல்ல வேண்டும்.
திருச்சி, கரூர், மதுரையில் இருந்து கோவை செல்லும் கன்டெய்னர், டேங்கர் லாரிகள் மற்றும் அதிக உயரமான பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் நொய்யல் சோதனை சாவடி, சாலை புதுார், தாமரைபாளையம், சிவகிரி, விளக்கேத்தி, மொடக்குறிச்சி, லக்காபுரம், முத்து கவுண் டன்பாளையம், ரிங்ரோடு வழியே ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம், திண்டல் கபே, மேட்டுக்கடை, நசியனுார் வழியே தேசிய நெடுஞ்சாலை சென்று கோவை செல்லலாம். கோவையில் இருந்து கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்லும் இலகு ரக வாகனங்கள் பெருந்துறை வழியே திண்டல் ரிங் ரோடு, ரங்கம்பாளையம், ஆணைக்கல்பாளையம், முத்து கவுண்டன் பாளையம், பரிசல் துறை 4 ரோடு, கொடுமுடி வழியே கரூர் செல்ல வேண்டும் அல்லது பெருந்துறை ஆர்.எஸ்., வெள்ளோடு, அரச்சலுார் தலவுமலை, விளக்கேத்தி, சிவகிரி, தாமரைப்பாளையம், சாலை புதுார் வழியே கரூர் செல்லலாம்.
மதுரை, திருச்சி, கரூர், திண்டுக்கல் நகரில் இருந்து கோவைக்கு வரும் இலகு ரக வாகனங்கள் நொய்யல் சோதனை சாவடி, சாலை புதுார், தாமரைபாளையம், சிவகிரி, விளக்கேத்தி, தலவுமலை, அனுமன்பள்ளி, வெள்ளோடு, பெருந்துறை ஆர்.எஸ், பெருந்துறை வழியே தேசிய நெடுஞ்சாலை சென்று கோவை செல்லலாம். அல்லது நொய்யல் சோதனை சாவடி, சாலை புதுார், தாமரைபாளையம், சிவகிரி, விளக்கேத்தி, மொடக்குறிச்சி, லக்காபுரம், முத்துகவுண்டன்பாளை யம், ரிங் ரோடு வழியே ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம், திண்டல் கபே, மேட்டுக்கடை, நசியனுார் வழியே தேசிய நெடுஞ்சாலை சென்று கோவை செல்லலாம். கரூர் - பல்லடம் வழியே கோவைக்கும், கோவையில் இருந்து பல்லடம் வழியே கரூருக்கும் 27 ஒரு நாள் மட்டும் கன ரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் செல்ல கூடாது. இவ்வாறு போலீசார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

