/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு, நாமக்கல், கரூரில் 'சி.இ.டி.பி.,' அமைக்க கொ.ம.தே.க., வலியுறுத்தல்
/
ஈரோடு, நாமக்கல், கரூரில் 'சி.இ.டி.பி.,' அமைக்க கொ.ம.தே.க., வலியுறுத்தல்
ஈரோடு, நாமக்கல், கரூரில் 'சி.இ.டி.பி.,' அமைக்க கொ.ம.தே.க., வலியுறுத்தல்
ஈரோடு, நாமக்கல், கரூரில் 'சி.இ.டி.பி.,' அமைக்க கொ.ம.தே.க., வலியுறுத்தல்
ADDED : பிப் 05, 2024 11:40 AM
ஈரோடு: பெருந்துறை அடுத்த சரளையில் கொ.ம.தே.க., கொங்கு எழுச்சி மாநாடு நேற்று நடந்தது. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வரவேற்று பேசினார்.
தொழிற்சாலைகளுக்காக நிலத்தை அரசு கையகப்படுத்தும்போது, நில உரிமையாளர், சுற்று பகுதி மக்களிடம் கருத்து கேட்டு, நிலத்தை கையகப்படுத்த வேண்டும். மரவள்ளி கிழங்கில் இருந்து எத்தனால் எடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை, 10 ரூபாய்க்கு திரும்ப வாங்கும் திட்டத்தை அமலாக்க வேண்டும்.
விசைத்தறியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சீருடை தயாரிக்கும் பணியை வழங்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பொய் வழக்கு போடுவதை களைய வேண்டும். தமிழகத்தில் நீண்ட காலமாக உள்ள சட்டசபை தனி தொகுதிகளை பொது தொகுதிகளாக மாற்ற வேண்டும். பொள்ளாச்சி, கோபி, ஆத்துார், திருச்செங்கோடு ஆகிய நகரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்கள் ஏற்படுத்த வேண்டும்.
தர்மபுரி, கிருஷ்ணகிரியை தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய மாவட்டங்களாக அறிவித்து, புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் முருங்கைகாயில் இருந்து மதிப்பு கூட்டு பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். மேட்டூர் அணை உபரி நீரை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தொழில் வளர்ச்சிக்காக கரூர், நாமக்கல் மாவட்டங்களுக்கு இடையே புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும். ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் பொது சுத்திகரிப்பு நிலையம் (சி.இ.டி.பி.,) அமைக்க வேண்டும். பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது உட்பட, 27 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

