/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து இ - சேவை மையங்களுக்கு எச்சரிக்கை

ADDED : மே 21, 2024 11:30 AM
ஈரோடு: பொது இ-சேவை மையங்களில், வருவாய் துறை சான்றிதழ் பெற, 60 ரூபாய், ஓய்வூதிய திட்டங்கள் - 10 ரூபாய், இணைய வழி பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் - 60 ரூபாய், சமூக நலத்துறையின் திருமண நிதியுதவி திட்டம், பெண் குழந்தை பாதுகாப்பு நிதியுதவி திட்டம் - 120 ரூபாய், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களுக்கு- 10 ரூபாய் மட்டுமே பெற வேண்டும்.
இ-சேவை மையங்களில் இந்த கட்டண பட்டியல், வழிகாட்டு நெறிமுறைகள், அரசு அங்கீகாரம் பெற்றமைக்கான பெயர் பலகை, சேவை தொடர்பான புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்: 1100, 18004256000, மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதை தவிர கூடுதல் கட்டணம் வசூலித்தால், உரிமம் ரத்து செய்யப்படும். இ-சேவை மையம் குறித்து புகாரை, tnesevailhelpdesk@tn.gov.in என்ற மின்னஞ்சல், அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண்: 1100, 0424 2260211ல் தெரிவிக்கலாம்.