/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விசைத்தறி மேம்பாட்டுக்கு மானியம் பெற அழைப்பு
/
விசைத்தறி மேம்பாட்டுக்கு மானியம் பெற அழைப்பு
ADDED : டிச 20, 2025 07:18 AM
ஈரோடு: விசைத்தறி துறையில் தொழில் நுட்ப தேவையை பூர்த்தி செய்ய, மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட சாதாரண விசைத்-தறிகளை, நாடாயில்லா ரேபியர் தறிகளாக தரம் உயர்த்த, மூல-தன மானியம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு, 3,000 விசைத்தறி-களை நவீனமாக்க, 30 கோடி ரூபாய் நிதி, புதிய நாடாயில்லாத ரேப்பியர் தறி அல்லது ஏற்கனவே இயங்கும் குறைந்த வேக-முள்ள பழைய தறிகளை மாற்றி அதிவேகமுள்ள புதிய ரேப்பியர் தறிகளை கொள்முதல் செய்ய, 15 கோடி ரூபாய் நிதி வழங்கப்-படும்.
இதற்கு, 50 சதவீத மூலதன மானியம் அல்லது 75,000 ரூபாய் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் என ஒருவருக்கு அதிகபட்சம், 10 தறிக்கு வழங்கப்படும்.
புதிய நாடா இல்லா ரேபியர் தறிகள் கொள்முதல் அல்லது பழைய குறைந்த வேக ரேப்பியர் திறகளுக்கு மாற்றாக புது ரேப்-பியர் தறிகள் கொள்முதலுக்கு, 20 சதவீத மூலதன மானியம் அல்-லது 1.50 லட்சம் என ஒரு பயனாளிக்கு, ஐந்து தறிகளுக்கு வழங்-கப்படும். அதுபோல வார்பிங், சைசிங் பிற செயல்பாட்டுக்கும் மானியம் வழங்கப்படும். தகுதியானோர், https://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணைய தள முகவிரியில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரத்துக்கு, பவானி சாலை, சரக கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

