/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனி பட்டா கேட்டு போயர் சமூகத்தினர் மனு
/
தனி பட்டா கேட்டு போயர் சமூகத்தினர் மனு
ADDED : டிச 17, 2025 07:28 AM
ஈரோடு: ஈரோடு அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் தலைமையில், அத்தாணி பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம், மனு வழங்கி கூறியதாவது:
அத்தாணி அருகே செம்புளிச்சாம்பாளையம், மாதையன்கோவில் புதுாரில், போயர் சமூகத்தை சேர்ந்த, 50 குடும்பத்துக்கு மேல் வசித்து வருகிறோம். அனைவரும் பரம்பரை கட்டட தொழிலா-ளர்கள். எங்களில் பெரும்பாலானவர்களுக்கு மூதாதையர் பெயரில் நிலம் அல்லது பட்டாவாக உள்ளது.
கூட்டுப்பட்டாவாக உள்ளதை தனி பட்டாவாக வழங்க கோரி முறையிட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு சிலருக்கு மட்டும் தனி பட்டாவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடன் பெறுதல், நிலத்தை பெயர் மாற்றம் செய்தல் என எந்த பணியும் செய்ய முடியவில்லை. இவ்வாறு கூறினர்.

