/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க., வேட்பாளரை நலம் விசாரித்த பா.ஜ., எம்.எல்.ஏ., : மாமியார்-மருமகன் சந்திப்பால் சிரிப்பலை

ADDED : மார் 28, 2024 11:58 AM

ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், த.மா.கா., வேட்பாளர் விஜயகுமார் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக நேற்று வந்தார். அவருடன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர் என்ற முறையில், மொடக்குறிச்சி பா.ஜ.,- எம்.எல்.ஏ., சரஸ்வதி உடன் வந்திருந்தார்.
அதேநேரம், அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், கூடுதல் மனுவை தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகம் வந்து, நுழைவு வாயில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மனுத்தாக்கல் முடிந்து கீழே வந்த எம்.எல்.ஏ., சரஸ்வதியை பார்த்து ஆற்றல் அசோக்குமார், 'நல்லா இருக்கீங்களா' என நலம் விசாரித்தார். அருகே வந்த எம்.எல்.ஏ.,வும், 'வேட்பாளராக போட்டியிடுவதற்கு வாழ்த்து தெரிவித்து' ஒரு நிமிடம் பேசிவிட்டு விலகினார்.
எம்.எல்.ஏ., சரஸ்வதியின் மகள் கருணாம்பிகா, ஆற்றில் அசோக்குமாரின் மனைவி. இவர்கள் வெவ்வேறு இடங்களில் வசிக்கும் நிலையிலும், எதிரான அரசியல் சூழலில் நேற்று மாமியார் - மருமகன் சந்திப்பு, 'நலம் விசாரிப்பாகி' அனைவரிடமும் சிரிப்பலையைஏற்படுத்தியது.