/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முருகன் கோவிலில் தங்க ரதம் செய்ய ஏற்பாடு
/
முருகன் கோவிலில் தங்க ரதம் செய்ய ஏற்பாடு
ADDED : மே 02, 2025 02:08 AM
சென்னிமலை:
-கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான சென்னிமலை முருகன் கோவிலுக்கு வாரம் தோறும் செவ்வாய்கிழமை ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இங்கு வேங்க மர தேர் தான் உள்ளது. தங்க ரதம் இல்லை. புதியதாக பொறுப்பேற்றுள்ள அறங்காவலர் குழுவினர் தங்க ரதம் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.
தங்க ரதத்திற்காக பக்தர்கள் தங்கம் காணிக்கையாக வழங்கலாம் எனவும், இதற்காக பதிவு செய்து கொள்ள பக்தர்களுக்கு அழைப்பு விடுத்து மலைமீதுள்ள கோவில் ராஜகோபுரம் முன்பு விளம்பர பதாகை வைத்துள்ளனர். அதில், தங்க ரதம் செய்ய தங்கம் வழங்க விருப்பப்படும் நபர்கள் கோவில் அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

