sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அம்ரூத் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் திட்டப் பணிகள் முடிப்பது எப்போது?

/

அம்ரூத் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் திட்டப் பணிகள் முடிப்பது எப்போது?

அம்ரூத் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் திட்டப் பணிகள் முடிப்பது எப்போது?

அம்ரூத் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் திட்டப் பணிகள் முடிப்பது எப்போது?


ADDED : அக் 17, 2024 03:09 AM

Google News

ADDED : அக் 17, 2024 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும், அம்ரூத் குடிநீர் விரிவாக்க பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கா-ததால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி, 27 வார்டுகளை கொண்-டது. 11,100க்கும் மேற்பட்ட வீடுகளையும், 39 ஆயிரம் மக்கள் தொகையும் உள்ளன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால், 1952ல், பவானி-குமாரபாளையம் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்-கப்பட்டது. காவிரி ஆற்றில் தண்ணீர் உறிஞ்சி, பவானியில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு, பவானி, குமாரபாளையம் நகராட்சிக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

30 ஆண்டுக்கு பின், குமாரபாளையம் நகராட்-சிக்கு தனி குடிநீர் திட்டம் துவங்கப்பட்டதால், 1989 முதல் பவானி நகராட்சிக்கு, காவிரி தலைமை நீரேற்று நிலையம் விரி-வாக்கம் செய்யப்பட்டது. திட்டம் துவங்கி நீண்ட காலங்களா-னதால், குழாய்கள் அடிக்கடி சேதமடைந்து, குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில், குடியிருப்பு விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு, அடுத்த, 30 ஆண்டுகளுக்கு தேவையான அளவில் குடிநீர் திட்ட விரிவாக்க பணிகளை செய்ய நகராட்சி திட்டமிட்டது. இதன்படி, 27 வார்டுகளிலும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு, 2023 ஜனவரியில், 24.06 கோடி ரூபாய் மதிப்பில் அம்ரூத் திட்டம் துவக்கப்பட்டது.காவிரி ஆற்றில் புதிதாக நீரேற்று நிலையம், குடிநீர் கிணறு, ஐந்து மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய சுத்திகரிப்பு நிலையம், 4.37 கி.மீ. தொலைவுக்கு பிரதான குழாய்கள், குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி, 45.62 கி.மீ. தொலைவுக்கு பகிர்மான குழாய்கள் அமைக்க செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டது. விறு-விறுப்பாக துவங்கப்பட்ட பணி, தற்போது ஊர்ந்து செல்கிறது. இந்தாண்டு ஜனவரி மாதம் முடிக்கப்பட வேண்டிய பணிகள், ஒன்பது மாதங்கள் கடந்தும் நடந்து வருகிறது. பல்வேறு பகுதி-களில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள், சரிவர மூடப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்-றனர்.குறிப்பிட்ட கால கட்டத்தில், குடிநீர் விரிவாக்க பணிகளை முடிக்க தவறியதால், ஒப்பந்ததாரருக்கு 13 முறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை, 22 வார்டுகளுக்கு குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இப்பணிகள் முழுமை-யாக முடிவடைந்தவுடன், மீதமுள்ள ஐந்து வார்டுகளுக்கும் பணி துவங்கும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.மிகவும் தாம-தமாக, மெதுவாக மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகளை தர-மாகவும், துரிதமாகவும் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே, அனைத்து தரப்பினரின் எதிர்-பார்ப்பாக உள்ளது.






      Dinamalar
      Follow us