/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இரு ரவுண்டானா பகுதிகளில் மாற்றம் நெடுஞ்சாலை துறைக்கு அறிவுரை
/
இரு ரவுண்டானா பகுதிகளில் மாற்றம் நெடுஞ்சாலை துறைக்கு அறிவுரை
இரு ரவுண்டானா பகுதிகளில் மாற்றம் நெடுஞ்சாலை துறைக்கு அறிவுரை
இரு ரவுண்டானா பகுதிகளில் மாற்றம் நெடுஞ்சாலை துறைக்கு அறிவுரை
ADDED : பிப் 05, 2024 11:12 AM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் முத்துசாமி தலைமையில், சாலை மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறையினர் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் ஈரோடு ப.செ.பார்க் ரவுண்டானா, ஜி.ஹெச். ரவுண்டானாவில் மாற்றம் செய்ய வேண்டும். சாலையோர நடைபாதை அளவை குறைக்க வேண்டும். நடைபாதைக்காக சாலையின் அளவை குறைக்க கூடாது. நடைபாதைகளில் ஆக்கிரமப்பு தான் உள்ளது. சாலை விரிவாக்கம், மேம்பாடு பணிகளில் மக்கள் கருத்தை கேட்க வேண்டும். மாறாக கட்டுமான துறை வல்லுனர்களின் கருத்துக்களை மட்டும் கேட்டு பணி செய்யக்கூடாது. ப.செ.பார்க் பகுதியில் இடப்புறம் வாகனங்கள் செல்ல தடை ஏற்படுத்தக்கூடாது. திண்டல்-பி.பெ.அக்ரஹாரம் ரிங் ரோடு பணிகளை முடிக்க முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும், நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஈரோடு ஜி.ஹெச். ரவுண்டானா, ப.செ.பார்க் ரவுண்டானா மேம்பாட்டு பணியால் ஏற்கனவே வாகன நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில் மீண்டும் இரு ரவுண்டானாவிலும் மாற்றம் செய்ய, அமைச்சர் முத்துசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் வரும் நாட்களில் இவ்விரு ரவுண்டானா பகுதியிலும் வாகன நெரிசலுக்கு குறைவிருக்காது. மாநகரில் வாகன ஓட்டிகளின் சிரமத்துக்குத்தான் முற்றுப்புள்ளி கிடைக்காமல் தொடர்கிறது.

