/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி செக்போஸ்ட் அருகே கவிழ்ந்தது
/
கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி செக்போஸ்ட் அருகே கவிழ்ந்தது
கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி செக்போஸ்ட் அருகே கவிழ்ந்தது
கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி செக்போஸ்ட் அருகே கவிழ்ந்தது
ADDED : அக் 03, 2024 01:37 AM
கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி
செக்போஸ்ட் அருகே கவிழ்ந்தது
அந்தியூர், அக். 3-
கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகரில் இருந்து, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளயத்தில் உள்ள தனியார் சுகர்ஸ் நிறுவனத்துக்கு, கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி, பர்கூர் அருகேயுள்ள கர்ககேண்டி செக்போஸ்ட் அருகே நேற்று முன்தினம் மாலை வரும்போது சாலையோரத்தில் கவிழ்ந்தது.
லாரியை ஓட்டி வந்த டிரைவர், சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே சித்துாரை சேர்ந்த மணிகண்டன், 42, காயங்கள் இன்றி உயிர் தப்பினார். அதே பகுதியை சேர்ந்த கிளீனர் கோவிந்தராஜ், 36, என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சாலையோரம் லாரி கவிழ்ந்ததால், போக்குவரத்து நெரிசல் எதுவும் இல்லை.
பர்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.