/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில் மோதியதில் பட்டதாரி வாலிபர் பலி
/
ரயில் மோதியதில் பட்டதாரி வாலிபர் பலி
ADDED : ஏப் 08, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, புங்கம்பாடி, சாலபாளையத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் திவாகரன், 29; பி.இ., பட்டதாரி.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்காக படித்து வந்தார். கடந்த, 6ம் தேதி மாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி செல்ல பெருந்துறை-தொட்டிபாளையம் இடையே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்துள்ளார். அப்போது வந்த ரயில் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

