/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராம உதவியாளர் பணிக்கான தேர்வில் 772 பேர் பங்கேற்பு
/
கிராம உதவியாளர் பணிக்கான தேர்வில் 772 பேர் பங்கேற்பு
கிராம உதவியாளர் பணிக்கான தேர்வில் 772 பேர் பங்கேற்பு
கிராம உதவியாளர் பணிக்கான தேர்வில் 772 பேர் பங்கேற்பு
ADDED : நவ 30, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு தாலுகாவில் காலியாக உள்ள, ஒன்பது கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேளாளர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.
இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாவட்ட வேலை வாய்ப்பகம், முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, தமிழ் வாசித்தல் மற்றும் எழுத்து தேர்வு நேற்று நடந்தது. மொத்தம், 1,104 விண்ணப்பதாரர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 772 பேர் மட்டும் எழுதினர். 332 பேர் புறக்கணித்து விட்டனர்.