/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
40 டன் மளிகை பொருள் சபரிமலைக்கு பயணம்
/
40 டன் மளிகை பொருள் சபரிமலைக்கு பயணம்
ADDED : டிச 22, 2025 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: சபரிமலை சன்னிதானத்தில் தேவசம் போர்டு நிர்வாகம் சார்பில், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்ப-டுகிறது.
இந்நிலையில் இதற்கு தேவைப்படும் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை, புன்செய்புளியம்பட்டி சபரிமலை பண்-ணாரி அம்மன் அன்னதான அறக்கட்டளை ஐயப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர். நடப்பாண்டு அரிசி, துவரம் பருப்பு, சுண்டல், கரும்பு சர்க்கரை, ரவை, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள், மண்டல பூஜைக்கு தேவையான வஸ்திரங்கள் என, 15 லட்ச ரூபாய் மதிப்பிலான, 40 டன் மளிகை பொருள் மற்றும் காய்கறிகளை, 12வது ஆண்டாக நேற்று அனுப்பி வைத்தனர்.

