/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
56,903 மாணவ, மாணவிகளுக்கு 3ம் பருவ புத்தகம், நோட்டு தயார்
/
56,903 மாணவ, மாணவிகளுக்கு 3ம் பருவ புத்தகம், நோட்டு தயார்
56,903 மாணவ, மாணவிகளுக்கு 3ம் பருவ புத்தகம், நோட்டு தயார்
56,903 மாணவ, மாணவிகளுக்கு 3ம் பருவ புத்தகம், நோட்டு தயார்
ADDED : ஜன 02, 2024 10:53 AM
ஈரோடு: அரையாண்டு தேர்வு முடிந்து, பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இந்நிலையில் எட்டாம் முதல் பிளஸ் 2 வரை அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில், 3ம் பருவத்துக்கான புத்தகம், நோட்டு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இன்று வழங்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளில் புத்தகம், நோட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்ட அரசு, நிதியுதவி பள்ளிகளில் ஆறாம் வகுப்பு பயிலும், 11,010 மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகம், ஒவ்வொருவருக்கும் தலா 5 நோட்டு வீதம், 55,050 நோட்டு; ஏழாம் வகுப்பில், 12,635 பேருக்கு புத்தகம், தலா ஐந்து நோட்டுகள் என, 63,175 நோட்டு வழங்கப்பட உள்ளது.
துவக்க பள்ளியை பொறுத்தவரை ஈரோடு கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட (அம்மாபேட்டை, பவானி, ஈரோடு, சென்னிமலை, கொடுமுடி, மொடக்குறிச்சி, பெருந்துறை யூனியனுக்கு உட்பட்ட) அரசு, நிதியுதவி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு பயிலும், 5,595 பேருக்கு பாட புத்தகம், ஒவ்வொருவருக்கும் தலா நான்கு நோட்டு; இரண்டாம் வகுப்பில், 6,734 பேருக்கு புத்தகம், தலா நான்கு நோட்டு; மூன்றாம் வகுப்பில், 6,988 பேருக்கு பாட புத்தகம், தலா ஐந்து நோட்டு; நான்காம் வகுப்பில், 6,636 பேருக்கு பாட புத்தகம், தலா ஐந்து நோட்டு; ஐந்தாம் வகுப்பில், 7,305 பேருக்கு புத்தகம், தலா ஐந்து நோட்டு வழங்கப்படுகிறது.
மாவட்ட அளவில் ஆறு, ஏழாம் வகுப்பில் 23,645 மாணவ மாணவியர்; ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 33,258 பேர் என, 56,903 பேர், மூன்றாம் பருவ புத்தகம், அதற்கான நோட்டுகளை இன்று பெறவுள்ளனர்.

