/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில் 380 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 380 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜூலை 29, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கந்தசாமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மகளிர் உரிமைத்தொகை, பல்வேறு உதவித்தொகை, போலீஸ் நடவடிக்கை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 380 மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நல வாரியத்தில் பதிவு பெற்ற ஐந்து பேருக்கு உறுப்பினர் அடையாள அட்டை, ஐந்து பேருக்கு இலவச சலவை பெட்டி வழங்கப்பட்டது.
பெருந்துறை தாலுகா பள்ளபாளையத்தில் தீ விபத்தில் இறந்த தங்காள் மகன் குணசேகரனிடம், முதல்வரின் பொது நிவாரண நிதி, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

