/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகரில் 'மாஸ் கிளீனிங்'கில் 33 டன் சாக்கடை கழிவு அகற்றம்
/
மாநகரில் 'மாஸ் கிளீனிங்'கில் 33 டன் சாக்கடை கழிவு அகற்றம்
மாநகரில் 'மாஸ் கிளீனிங்'கில் 33 டன் சாக்கடை கழிவு அகற்றம்
மாநகரில் 'மாஸ் கிளீனிங்'கில் 33 டன் சாக்கடை கழிவு அகற்றம்
ADDED : டிச 10, 2025 10:56 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் மாஸ் கிளீனிங் முறையில் அவ்வப்போது குப்பை அகற்றம் மற்றும் சாக்கடைகள் துார்வாரும் பணி நடக்கி-றது. இதன்படி மூன்றாவது மண்டலம்,
51வது வார்டு ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியில், மாஸ் கிளீனிங் நேற்று நடந்தது.இதேபோல் ஒன்றாவது மண்டலம் சத்திரோடு, அருள் வேலவன் நகர் பகுதிகளில் சாக்கடை துார்வாரும் பணி; இரண்டாவது மண்டலம், 19வது வார்டு நசியனுார் ரோட்டில்
சாக்கடை துார்வாரும் பணி; நான்காம் மண்டலம் 53வது வார்டு கொல்லம்பாளையம் ரயில்வே காலனி பள்ளியில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பு துாய்மை குழுவை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில், 33 டன் சாக்கடை கழிவு அகற்றப்பட்டதாக அதிகா-ரிகள் தெரிவித்தனர்.