ADDED : ஏப் 19, 2024 06:34 AM
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இத்தொகுதியில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என, 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சி வேட்பாளர்களாக அ.தி.மு.க., - ஆற்றல் அசோக்குமார், பகுஜன் சமாஜ் கட்சி - ப.ஈஸ்வரன், தி.மு.க., - கே.இ.பிரகாஷ், நாம் தமிழர் கட்சி - கார்மேகன், உழைப்பாளி மக்கள் கட்சி - பொ.குப்புசாமி, அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் - ரா.குமார், வீரத்தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர் கட்சி - ரா.தண்டபாணி, ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி - பா.தர்மராஜ், நாடாளும் மக்கள் கட்சி - வ.தனலட்சுமி, இந்திய கணசங்கம் கட்சி - கு.மாதன், சாமானிய மக்கள் நலக்கட்சி - அ.தி.முனுசாமி, த.மா.கா., - பொ.விஜயகுமார் உள்ளனர்.
சுயேட்சையாக, நா.அசோக்குமார், தா.வெ.ரா.அமிர்தலிங்கம், ஆறுமுகா ஏ.சி.கண்ணன், சீ.ஆனந்தி, மு.கீர்த்தனா, ர.குமரேசன், ஜெ.கோபாலகிருஷ்ணன், மா.சண்முகம், மு.சபரிநாதன், க.செந்தில்குமார், மா.நரேந்திரநாத், பிரசாத் சிற்றரசு, மு.பிரபாகரன், க.மயில்சாமி, த.மயில்வாகனன், ஆர்.மின்னல் முருகேஷ், ல.ரவிச்சந்திரன், ப.ராஜேந்திரன், கே.கே.வடுகநாதன் என, 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.வேட்பாளர்கள், 31 பேராக களத்தில் உள்ளதால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா, இரண்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், ஒரு வி.வி.பேட் பயன்படுத்தப்படுகிறது. ஒரு இயந்திரத்தில், 16 வேட்பாளரும், இரண்டாவது இயந்திரத்தில், 15 வேட்பாளர் மற்றும் 16வது இடத்தில் நோட்டோவும் இடம் பெற்றுள்ளது.

