/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
/
ஓட்டு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
ADDED : ஏப் 08, 2024 07:25 AM
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதி ஓட்டுப்பதிவு வரும், 19ல் நடக்கிறது. சித்தோடு ஐ.ஆர்.டி.டி., கல்லுாரியில் ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஓட்டு எண்ணும் மையத்துக்கு வரும், 19ம் தேதி முதல், ஓட்டு எண்ணும் நாள் வரை மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும். முதல் சுற்றில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறையை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரும், இரண்டாவது சுற்றில் ஆயுதப்படை மற்றும் பட்டாலியன் போலீசாரும் இருப்பர்.
மூன்றாவது சுற்றில் லோக்கல் போலீசார் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஈடுபடுவர். 'சிசிடிவி' கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடக்கும். இவ்வாறு போலீசார் கூறினர்.

