/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மக்கள் சிறைபிடித்ததால் அம்பலம் விதிமீறிய லாரிக்கு ரூ.22 ஆயிரம் அபராதம்

ADDED : அக் 17, 2024 01:35 AM
மக்கள் சிறைபிடித்ததால் அம்பலம்
விதிமீறிய லாரிக்கு ரூ.22 ஆயிரம் அபராதம்
காங்கேயம், அக். 17-
காங்கேயம் தாலுகா பழையகோட்டை ஊராட்சி, வெங்கரையாம்பாளையம் அருகே தனியார் நிறுவனம், ஜல்லி கிரசர், எம்.சாண்ட் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இங்கிருந்து தினமும் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு லாரியில் அதிகபட்சம், ௧௦.௫ டன் தான் ஏற்றிச் செல்ல வேண்டும். ஆனால், அதிக அளவில் ஏற்றிச் செல்லப்படுவதாகவும், இதனால் சாலைகள் அடிக்கடி சேதமாவதாகவும் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கிராம மக்கள் நேற்று, எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த இரு லாரிகளை நேற்று சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கேயம் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் பேச்சுவார்த்தை நடத்தினார். கற்கள் கொண்டு வந்த லாரியில், ௧௦ டன் கூடுதலாகவும், எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரியில், ஒரு டன் கூடுதலாகவும் ஏற்றப்பட்டது தெரிந்தது. ௧௦ டன் கூடுதலாக ஏற்றிய லாரிக்கு, வருவாய் துறையினர், ௨௨ ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே லோடு ஏற்றிச் செல்ல வேண்டும். இந்த விதியை மீறினால், நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மக்கள் வலியுறுத்தினர்.