ADDED : நவ 06, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயிலில் வந்த 2000 டன் நெல்
ஈரோடு, நவ. 6-
தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்கு, திருவாரூர் மாவட்டத்தில், 2,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தனி சரக்கு ரயிலில் ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டுக்கு நேற்று வந்தது. நுாற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி, நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நெல் அரவை முகவர்களிடம் கொடுத்து, புழுங்கல் அரிசியாக மாற்றப்பட்டு, பொது வினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
'

