/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வி.சி., நிர்வாகி உள்பட ௨ பேர் செயின் பறிப்பு வழக்கில் கைது
/
வி.சி., நிர்வாகி உள்பட ௨ பேர் செயின் பறிப்பு வழக்கில் கைது
வி.சி., நிர்வாகி உள்பட ௨ பேர் செயின் பறிப்பு வழக்கில் கைது
வி.சி., நிர்வாகி உள்பட ௨ பேர் செயின் பறிப்பு வழக்கில் கைது
ADDED : மே 02, 2025 01:39 AM
சென்னிமலை:
சென்னிமலை, மின்னக்காடு பகுதியில் தனலட்சுமி என்பவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு கடையில் தனலட்சுமி தாயார் அருக்காணி அம்மாள் இருந்துள்ளார்.
அப்போது ஸ்கூட்டியில் வந்த, 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், 30 வயது பெண்ணும் கடை முன் வந்துள்ளனர். ஸ்கூட்டி அருகே பெண் நின்று கொண்டிருந்தார். கடைக்கு சென்ற அந்த நபர், அருக்காணி அம்மாளிடம் பீரோ என்ன விலை என்று கேட்டபடி, அவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் செயினை பறித்து கொண்டு, கடைக்கு வெளியே தயாராக இருந்த ஸ்கூட்டியில் ஏறி, இருவரும் தப்பினர்.
சென்னிமலை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் துரிதமாக செயல்பட்டு. கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து, நகையை பறித்தவர்களை, 20 மணி நேரத்தில் நேற்று காலை கைது செய்தனர். இதில், சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் வீரபத்திரசாமி வீதி பழனிசாமி மகன் ரமேஷ், 25, சென்னிமலை, தியாகி குமரன் நகரில் கணவரை பிரிந்து வாழும் தமிழ்ச்செல்வி, 30, என தெரியவந்தது.
தமிழ்ச்செல்வி வி.சி., கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் நகையை, ஈரோட்டில் உள்ள தனியார் கடையில் அடகு வைத்து, ரூ.1.45 லட்சம் பெற்றுள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர். மேலும் ஸ்கூட்டியை பறிமுதல் செய்தனர்.

