/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டூவீலர்கள் நேருக்குநேர் மோதலில் 2 பேர் பலி:பவானி அருகே இரவில் கோர விபத்து

ADDED : பிப் 21, 2024 01:14 AM
பவானி:பவானி அருகே இரவில், டூவீலர்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில், வங்கி ஊழியர் உள்பட இருவர் பலியாகினர். இருவர் படுகாயம் அடைந்தனர்.
பவானி
அருகேயுள்ள குட்டை முனியப்பன் கோவிலை சேர்ந்தவர் அருள், 20; சென்ட்ரிங்
தொழிலாளி. பவானி அருகே கண்ணாகரட்டை சேர்ந்தவர் ஜீவானந்தம், 20; பஞ்சு
மெத்தை தயாரிப்பு தொழிலாளி. பவானி அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வெல்டிங்
தொழிலாளி சதீஷ், 20௦; இவர்கள் மூவரும் யமாஹா பைக்கில், சித்தாரில் இருந்து
பவானிக்கு நேற்றிரவு சென்றனர். பவானி அருகே சேவானுாரை சேர்ந்தவர்
மாரிமுத்து, 33௩; தனியார் வங்கி ஊழியர்.
பணி முடிந்து யுனிகார்ன்
பைக்கில், வீட்டுக்கு நேற்றிரவு சென்றார். இரவு, ௯:௫௦ மணியளவில்
குட்டை முனியப்பன்கோவில், சேவிண்டியூர் பிரிவு அருகில்
எதிர்பாராதவிதமாக, இரு டூவீலர்களும் நேருக்குநேர் மோதிக் கொண்டன.
இதில் சம்பவ இடத்தில் அருள் பலியானார்.
பவானி அரசு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரிமுத்து இறந்தார்.
படுகாயம் அடைந்த மற்ற இருவரும், ஈரோடு தனியார் மருத்துவமனையில்
சிகிச்சை பெறுகின்றனர். இரவில் நடந்த கோர விபத்தில் இருவர் பலியானது
சோகத்தை ஏற்படுத்தியது.