/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
17 நாட்களேயான குழந்தை மூச்சுத்திணறலால் இறப்பு
/
17 நாட்களேயான குழந்தை மூச்சுத்திணறலால் இறப்பு
ADDED : மார் 16, 2024 09:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 27; கூலி தொழிலாளியான இவரின் மனைவி பிரியா, 21; தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கர்ப்பமான பிரியாவுக்கு கடந்த பிப்.,25ல் உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு நேற்று முன்தினம், தாய்ப்பால் கொடுத்தபோது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
டாக்டர் பரிசோதனையில் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டது தெரிந்தது. சுப்பிரமணி புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

