/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஓட்டுக்கு துட்டு தரமாட்டோம் மற்றவர் தந்தாலும் தடுப்போம்'
/
'ஓட்டுக்கு துட்டு தரமாட்டோம் மற்றவர் தந்தாலும் தடுப்போம்'
'ஓட்டுக்கு துட்டு தரமாட்டோம் மற்றவர் தந்தாலும் தடுப்போம்'
'ஓட்டுக்கு துட்டு தரமாட்டோம் மற்றவர் தந்தாலும் தடுப்போம்'
ADDED : ஏப் 10, 2024 01:56 AM
நம்பியூர்;திருப்பூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து, இந்து மக்கள் கட்சி சார்பில், அக்கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத், கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். நம்பியூரை அடுத்த எலத்துாரில், பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
தாயார் இறந்தபோதும், ஈமச்சடங்கை முடித்து அடுத்த கணமே, வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்க வந்தவர்தான் நம் பிரதமர் நரேந்திர மோடி. இப்படிப்பட்ட தலைவர் நமக்கு கிடைத்தது பெருமைக்குரிய விஷயம். பா.ஜ., கொள்கை ஓட்டுக்கு பணம் கொடுப்பதில்லை; மற்றவர்கள் பணம் கொடுத்தாலும் இந்த கூட்டணியினர் தடுப்போம். அதை நிச்சயமாக செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.