/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெற்றோர்களின் மொபைல் போன் எண் 'எமிஸ்' இணைய தளத்தில் பதிவேற்றம்
/
பெற்றோர்களின் மொபைல் போன் எண் 'எமிஸ்' இணைய தளத்தில் பதிவேற்றம்
பெற்றோர்களின் மொபைல் போன் எண் 'எமிஸ்' இணைய தளத்தில் பதிவேற்றம்
பெற்றோர்களின் மொபைல் போன் எண் 'எமிஸ்' இணைய தளத்தில் பதிவேற்றம்
ADDED : மே 18, 2024 01:17 AM
ஈரோடு: பள்ளி கல்வித்துறையின் 'எமிஸ்' இணைய தளத்தில், மாணவர்களது பெற்றோரின் மொபைல் போன் எண்களை, பதிவேற்றம் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.
பள்ளி கல்வித்துறையின் கீழ் கல்வி மேலாண்மை தகவல் மையம் (எமிஸ்) திட்டத்தில், மாணவர் பெயர், பிறந்த தேதி, ரத்த வகை, பெற்றோர் விபரம், மொபைல் எண், ஆதார் எண், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட தகவல் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மொபைல் எண் குளறுபடி, தவறால், பெற்றோர்களுக்கு தகவல் செல்லாமல் போனது. இதற்கு தீர்வு காணும் வகையில், பெற்றோர் மொபைல்போன் எண்ணை மீண்டும் சேகரித்து, உறுதி செய்து, எமிஸில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இரு நாட்களாக இப்பணி நடந்து வருகிறது.
இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
'எமிஸ்' இணைய தளத்தில் மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண் முழுமையாக இல்லாததால், பள்ளி கல்வித்துறையின் தகவல், பெற்றோரை சேர்வதில்லை என்ற புகார் எழுகிறது. இதனால் பெற்றோர்களை அந்ததந்த பள்ளி ஆசிரியர் மூலம் தொடர்பு கொண்டு, அவர்களது மொபைல் எண்களை உறுதி செய்து பதிவேற்றம் செய்து வருகிறோம். பள்ளி திறக்கும் முன் இப்பணியை நிறைவு செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.

