/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பணியில் வீர மரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை
/
பணியில் வீர மரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை
பணியில் வீர மரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை
பணியில் வீர மரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை
ADDED : ஏப் 15, 2024 03:28 AM
ஈரோடு: பணியின்போது வீர மரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு, நேற்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தீயணைப்பு துறையில் பணியின் போது உயிரிழந்த வீரர்களை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் ஏப்.,14ம் தேதி தீத்தொண்டு வாரமாக கடைபிடிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது. இதன்படி ஈரோடு தீயணைப்பு நிலைய வளாகத்தில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் கணேசன், நிலைய அலுவலர் லெமர் தம்பைய்யா மற்றும் வீரர்கள் மலர் வளையம் வைத்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தீத்தடுப்பு உறுதிமொழி ஏற்று, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல் மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை, பவானி, சத்தி, அந்தியூர், கோபி, ஆசனுார் உள்ளிட்ட அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும், பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இவர்களது நினைவை போற்றும் வகையில் வரும், 20ம் தேதி வரை தீத்தொண்டு வாரம் கடைபிடிக்கப்படும். இதன்படி பள்ளி, கல்லுாரி மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

