/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மூங்கில் மரம் முறிந்து விழுந்ததால் மைசூரு சாலையில் 'டிராபிக் ஜாம்'
/
மூங்கில் மரம் முறிந்து விழுந்ததால் மைசூரு சாலையில் 'டிராபிக் ஜாம்'
மூங்கில் மரம் முறிந்து விழுந்ததால் மைசூரு சாலையில் 'டிராபிக் ஜாம்'
மூங்கில் மரம் முறிந்து விழுந்ததால் மைசூரு சாலையில் 'டிராபிக் ஜாம்'
ADDED : ஏப் 23, 2024 04:15 AM
சத்தியமங்கலம்: தாளவாடியை அடுத்த ஆசனுார் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மதியம் சூறாவளி காற்றுடன் லேசான மழை பெய்தது.
காற்றைத் தாக்குப் பிடிக்க முடியாமல், காரப்பள்ளம் சோதனைச்சாவடிக்கு அருகில் சாலையோர மூங்கில் மரம் காற்றில் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
மூங்கில் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மதியம், 3:௦௦ மணிக்கு விழுந்த மூங்கில் மரக்கொத்து, 6:௦௦ மணிக்கு வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.
இதனால் மைசூரு சாலையில், 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட துாரம் அணிவகுத்து நின்றன.