/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மத்திய அரசால் நலிவடைந்த ஜவுளித்துறை:மீட்டெடுப்பதாக தி.மு.க., வேட்பாளர் நம்பிக்கை
/
மத்திய அரசால் நலிவடைந்த ஜவுளித்துறை:மீட்டெடுப்பதாக தி.மு.க., வேட்பாளர் நம்பிக்கை
மத்திய அரசால் நலிவடைந்த ஜவுளித்துறை:மீட்டெடுப்பதாக தி.மு.க., வேட்பாளர் நம்பிக்கை
மத்திய அரசால் நலிவடைந்த ஜவுளித்துறை:மீட்டெடுப்பதாக தி.மு.க., வேட்பாளர் நம்பிக்கை
ADDED : ஏப் 16, 2024 01:39 AM
ஈரோடு:ஈரோடு லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் கே.இ.பிரகாஷ், ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பள்ளிபாளையம், தில்லை நகர், அக்ரஹாரம், ஆண்டிகாடு, ஒட்டமெத்தை, ஆலாம்பாளையம், சின்னகவுண்டன்பாளையம், வெங்கடேசபரம், எஸ்.பி.பி., காலனி, அன்னை சத்யா நகர், ஆயக்காட்டூர், கொங்கு நகர், கரட்டாங்காடு உட்பட பல்வேறு இடங்களில் நேற்று ஓட்டு சேகரித்து பேசியதாவது:கடந்த, 10 ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில் ஜவுளித்துறை முற்றிலும் நலிவடைந்து, ஆயிரக்கணக்கான ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பாரம்பரியமாக ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டு வந்தவர்கள், ஜவுளி தொழிலை விட்டே வெளியே சென்றுவிட்டனர்.
மத்திய அரசின் தவறான கொள்கைகள், திட்டங்களால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டது. எனவே மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், நலிவடைந்து வரும் ஜவுளித்துறை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நுால் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடும், நுால் இறக்குமதிக்கு கூடுதல் வாய்ப்பும் தரப்படும். ஜவுளி தொழிலை சார்ந்தவர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும். ரயான், பாலியஸ்டர் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களுக்கு ஜி.எஸ்.டி., ரிட்டன் மட்டும், 160 கோடி ரூபாய்க்கு மேல் வழங்காமல், மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது. அவற்றை முழுமையாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். விசைத்தறிகள் நவீனப்படுத்தப்படும்.
இவ்வாறு பேசினார்.
மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

