/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய தமிழகம்: அண்ணாமலை கவலை
/
தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய தமிழகம்: அண்ணாமலை கவலை
தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய தமிழகம்: அண்ணாமலை கவலை
தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய தமிழகம்: அண்ணாமலை கவலை
ADDED : ஆக 11, 2024 06:56 AM

ஈரோடு: ''தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி, பிற மாநிலங்களைக் காட்டிலும் பின்தங்கியுள்ளது,'' என்று, பா.ஜ., தலைவர் அண்ணாமலை கவலை தெரிவித்தார்.
வருங்கால தலைமுறையினரின் தொழில் முனைவோருக்கான கூட்டம் ஈரோட்டில் தனியார் சார்பில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி இந்திய அளவில் குறைவாக உள்ளது.
தமிழகம் ஜி.எஸ்.டி., மாநில வருவாய் மைனஸ், 11 பாயிண்ட் அடிப்படையில் சென்றுள்ளது. அப்படி என்றால், தமிழகத்தின் பொருளாதாரம் சீர்குலைவு நோக்கி செல்கிறது.
தொழில் முனைவோர் முதல்வரை நேரில் பார்க்க முடியவில்லை. ஆடிட்டர், மருமகன், இன்னும் பலரை தேடி அலைந்து பார்த்த பின்னரே முதல்வரை பார்க்கும் சூழல் உள்ளது. லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் துவங்கும் வகுப்பில் செப்., 2 முதல் பங்கேற்கிறேன். நவ., இரண்டாவது வாரத்தில் வகுப்பு நிறைவு பெறும்.
தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலில் அரசியல் புரட்சி நடக்கும். நடிகர் விஜய் போட்டிக்கு வந்தால் தான் மக்களுக்கு நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை நேsற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு, போக்குவரத்து துறை ஓய்வூதியதாரர்களுக்கு, ஓய்வுக்கால பணப்பலனுக்காக, 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. கடந்த 18 மாதங்களாக ஓய்வூதியர்களுக்கான பணப்பலன் வழங்காமல் இருந்த தமிழக அரசு, பா.ஜ., இந்த பிரச்னையை முன்னெடுத்ததும், நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை வரவேற்கிறோம்.
மேலும், 102 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் போக்குவரத்து துறை ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வையும் உடனே வழங்கும்படி, தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

