/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி
/
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி
ADDED : ஏப் 11, 2024 07:35 AM
காங்கேயம் : ஈரோடு லோக்சபா தொகுதியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட, 31 பேர் போட்டியிடுகின்றனர். வரும், 19ம் தேதியன்று ஓட்டுப்பதிவு நடைபெறும் நிலையில், வாக்காளர்கள் ஓட்டு போடும் இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று காங்கேயம் பழையகோட்டை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
துவங்கியது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார், காங்கேயம் தாசில்தார் மயில்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 31 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா ஆகியோருக்கான சின்னங்கள் பொருத்தப்படுகின்றன.
காங்கேயம் தொகுதியில் பொதுமக்கள் ஓட்டளிக்க வேண்டி, 295 ஓட்டுச்சாவடி மையங்களில் பயன்படுத்த உள்ள, 295 கன்ட்ரோல் யூனிட்களும், 590 பேலட் இயந்திரங்களும் பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால், பயன்படுத்த கூடுதல் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது. இப்பணிகளை, ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால்சுன்கரா பார்வையிட்டார். 125 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர். மேலும் பெல் நிறுவனத்தில் இருந்து இரண்டு பொறியாளர்கள், அந்தந்த கட்சியின் முகவர்கள் கலந்து
கொண்டனர்.

