/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டூ-வீலர்கள் மோதலில் மேற்பார்வையாளர் பலி
/
டூ-வீலர்கள் மோதலில் மேற்பார்வையாளர் பலி
ADDED : ஏப் 21, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொடக்குறிச்சி : ஈரோடு, சூரம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் சரவணன், 48, திருமணம் ஆகாதவர். சோலாரில் கிரீன் பார்க் கம்பெனியில் மேற்பார்வையாளராக வேலை செய்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் ஹீரோ ஹோண்டா பைக்கில் பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டைக்கு சொந்த வேலையாக சென்றார்.
எதிரே அதிவேகமாக ஸ்கூட்டியில் வந்தவர் பைக் மீது மோதினார். இதில் சரவணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

