/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் வீட்டு ஓட்டை பிரித்து ரூ.20 லட்சம், 20 பவுன் திருட்டு
/
ஈரோட்டில் வீட்டு ஓட்டை பிரித்து ரூ.20 லட்சம், 20 பவுன் திருட்டு
ஈரோட்டில் வீட்டு ஓட்டை பிரித்து ரூ.20 லட்சம், 20 பவுன் திருட்டு
ஈரோட்டில் வீட்டு ஓட்டை பிரித்து ரூ.20 லட்சம், 20 பவுன் திருட்டு
ADDED : ஏப் 15, 2024 03:28 AM
ஈரோடு: ஈரோட்டில் வீட்டின் ஓட்டை பிரித்து, 20 லட்சம் ரூபாய், 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ஈரோடு, ஆர்.கே.வி.சாலை, ஜின்னா வீதி அருகே, மார்க்கெட் சந்து பகுதியை சேர்ந்தவர் சிராஜூதின், 70; திருமண மண்டபங்களில் மலர் டெக்கரேஷன் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி லைலா பானு; திருமணமான இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
ரம்ஜான் பண்டிகைக்காக மகள்கள், மகன் குடும்பத்தினருடன் சிராஜூதின் ஊட்டிக்கு நேற்று முன்தினம் காலை சுற்றுலா சென்றார். நள்ளிரவில் வீடு திரும்பினர். கதவை திறந்து உள்ளே சென்றபோது, ஓடு பிரிக்கப்பட்டும், உள் அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சியுடன் உள்ளே சென்றபோது, பீரோ உடைக்கப்பட்டு, 20 லட்சம் ரூபாய், 20 பவுன் நகைகள் திருட்டு போனது தெரிந்தது. அவருக்கு சொந்தமான அருகிலுள்ள இரு வீட்டிலும் ஓட்டை பிரித்து திருட்டு முயற்சி நடந்ததும் தெரிந்தது. புகாரின்படி ஈரோடு டவுன் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதி 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், கைவரிசை காட்டிய ஆசாமிகளை தேடி வருகின்றனர். நிலம் வாங்க வைத்திருந்த பணம், நகை திருட்டு போய் விட்டதாக, சிராஜூதீன் வேதனை தெரிவித்தார்.

