/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாவடி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மனு
/
பாவடி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மனு
ADDED : செப் 03, 2024 03:57 AM
ஈரோடு: பவானியில் நெசவாளர்களுக்கான பாவடி நில ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு வழங்கினர்.
செங்குந்த கைக்கோள ரெட்டுக்கார முதலியார் நெசவாளர் சங்கம் சார்பில், மனு வழங்கி கூறியதாவது: பவானி நகராட்சி, அந்தியூர் - மேட்டூர் பிரிவில் செங்குந்த கைக்கோள ரெட்டுக்கார முதலியார் நெசவாளர் சமூகத்துக்கு சொந்தமான காலி இடத்தில், பாவு நுால் நுாற்பதற்கு பல ஆண்டுகளாக நெசவாளர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்விடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிமன்ற உத்தரவிலும், எங்களுக்கான இடம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், இடத்தை அளந்து, அத்து குறித்து கொடுக்காமல் உள்ளதால் ஆக்கிரமிப்புக்களை அகற்ற முடியவில்லை. பாவடி நிலத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். இவ்வாறு கூறினர்

