ADDED : ஏப் 15, 2024 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கோடை வெயில் தாக்கத்தால், எலுமிச்சம் பழத்தின் தேவை அதிகரித்து, ஈரோடு மார்க்கெட்டில் விலையும் உயர்ந்துள்ளது.
ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தென்காசி, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து எலுமிச்சம் பழம் வரத்தாகிறது.
தற்போது விளைச்சல் பாதிப்பு, தேவை அதிகரிப்பால் குறைந்த அளவே ஈரோடு வருகிறது. கோடை தாக்கத்தால் பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜன., மாதம் கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட பழம், நேற்று கிலோ, 180 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை விலை போனது.

