/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
/
பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 16, 2024 01:52 AM

அந்தியூர்:ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை மற்றும் பர்கூர் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு, பல மணி நேரம் கனமழை கொட்டியது.
இதனால், பர்கூர் மலையில் உள்ள தாமரைக்கரை - அந்தியூர் சாலையில், செட்டிநொடி என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் சாலையில் உருண்டன.
பர்கூர் போலீசார், நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரத்துடன் சென்று, சாலையில் விழுந்த பாறை, சரிந்த மண் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால், நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணி முதல் நேற்று காலை 8:00 மணி வரை, மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அந்தியூர் வழியாக பர்கூர், கர்நாடகா செல்லும் வாகனங்கள், வரட்டுப்பள்ளம் அணை செக்போஸ்டிலும், கர்நாடகாவில் இருந்து அந்தியூர் வரும் வாகனங்கள், தாமரைக்கரையிலும் நிறுத்தப்பட்டன. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி முடிந்த பின், வாகனங்கள் செல்லத் துவங்கின.
பர்கூர் வனப்பகுதி அடிவாரத்தில், செலம்பூர் அம்மன் கோவில் - செக்போஸ்ட் சாலையில் தரைப்பாலம் உள்ளது. கனமழையால் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால், பொதுமக்கள் இவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், குரும்பபாளையம் அரசு பள்ளி வழியாக 3 கி.மீ., சுற்றி செல்கின்றனர்.

