/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜவுளி தொழில் மேம்பாட்டுக்கு திட்டங்கள் பெற்றுத்தருவேன்; த.மா.கா., வேட்பாளர்
/
ஜவுளி தொழில் மேம்பாட்டுக்கு திட்டங்கள் பெற்றுத்தருவேன்; த.மா.கா., வேட்பாளர்
ஜவுளி தொழில் மேம்பாட்டுக்கு திட்டங்கள் பெற்றுத்தருவேன்; த.மா.கா., வேட்பாளர்
ஜவுளி தொழில் மேம்பாட்டுக்கு திட்டங்கள் பெற்றுத்தருவேன்; த.மா.கா., வேட்பாளர்
ADDED : ஏப் 15, 2024 03:52 AM
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதி பா.ஜ., கூட்டணி த.மா.கா., வேட்பாளர் விஜயகுமார், ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதியில் நேற்று ஓட்டு சேகரித்தார். வீரப்பன்சத்திரம், சத்தி சாலை, சி.என்.கல்லுாரி, அக்ரஹாரம், பெரியசேமூர், சென்னிமலை சாலை உட்பட பல்வேறு வீதி, வீதியாக சென்று ஓட்டு சேகரித்து, வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:
ஈரோடு பகுதியில், 4 இடங்களில் நடக்கும் மஞ்சள் ஏல விற்பனையை, ஒரே இடத்தில் ஏலத்தை நடத்த வழி செய்யப்படும். மஞ்சளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி செய்யவும், அவற்றை சந்தைப்படுத்தவும் தேவையான மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
காவிரி ஆறு, காளிங்கராயன் வாய்க்காலில் கலக்கப்படும் சாய, சலவை, தோல் ஆலை கழிவு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த, மத்திய அரசு மூலம் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தப்படும். பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால், துணிகளை மதிப்பு கூட்டியதாக மாற்ற பிற மாநிலங்களுக்கு அனுப்பி, திரும்ப பெறுவதால் கூடுதல் செலவாகிறது. அதனை தடுக்கவும், ஜவுளித்தொழில், விசைத்தறி கூடங்கள் மேம்பட, மத்திய அரசிடம் இருந்து புதிய திட்டங்களை பெற்று செயல்படுத்துவேன். விவசாயம் சார்ந்த ஈரோடு மாவட்டத்தில் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க, மத்திய அரசிடம் வலியுறுத்தி, நடவடிக்கை எடுப்பேன்.
மத்தியில் நிலையான ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் அமையும்போது, நாடு வளர்ச்சி பெறுவதுடன், நமக்கான திட்டங்களை கேட்டு பெற இயலும். எனவே, எனக்கு சைக்கிள் சின்னத்தில் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.
த.மா.கா., பொதுச் செயலாளர் விடியல்சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, மாநிலக்குழு உறுப்பினர் சந்திரசேகர், பா.ஜ., மாநில நிர்வாகி வக்கீல் பழனிசாமி, மாவட்ட தலைவர் வேதானந்தம் கலந்து கொண்டனர்.

