/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடுமுடி, கூடுதுறையில் விநாயகர் சிலைகள் கரைப்பு
/
கொடுமுடி, கூடுதுறையில் விநாயகர் சிலைகள் கரைப்பு
ADDED : செப் 10, 2024 07:20 AM
கொடுமுடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொடுமுடி, சிவகிரி, ஒத்தக்கடை, தாமரைப்பாளையம், நடுப்பாளையம், கொல்லங்கோவில், மலையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 16 விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கொடுமுடி காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
முன்னதாக பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், விநாயகர் சிலைகளை எடுத்துவந்த வேன்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. அங்கிருந்து விசர்ஜன ஊர்வலம் தொடங்கியது. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ரகுபதி, அரசகண்டர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
பின்னர் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று காவிரி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன. கொடுமுடி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.* விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பவானியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட நான்கு விநாயகர் சிலைகள், பவானி சுற்று வட்டார பகுதிகளில் வைக்கப்பட்ட, 65 சிலைகள், அந்தியூர் பிரிவு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கூடுதுறையில் கரைக்கப்பட்டன.

