/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனித்து நிற்பது ஏன் தெரியுமா? ஈரோட்டில் சீமான் விளக்கம்
/
தனித்து நிற்பது ஏன் தெரியுமா? ஈரோட்டில் சீமான் விளக்கம்
தனித்து நிற்பது ஏன் தெரியுமா? ஈரோட்டில் சீமான் விளக்கம்
தனித்து நிற்பது ஏன் தெரியுமா? ஈரோட்டில் சீமான் விளக்கம்
ADDED : ஏப் 10, 2024 01:57 AM
ஈரோடு;ஈரோடு லோக்சபா தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகனை ஆதரித்து, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு அருகே வீரப்பன்சத்திரத்தில் நேற்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: கூட்டமோடு நிற்பதுக்கு துணிவோ, வீரமோ அவசியமில்லை. தனித்து நிற்பதுக்குதான் துணிவு, வீரம் தேவைப்படுகிறது. ஊழல், லஞ்சத்தை ஒழிக்கவே தனித்து நிற்கிறோம். ஊழல், லஞ்சத்தை ஒழிக்க, முதலில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்., கட்சிகளை ஒழிக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி மட்டுமே வீதி வீதியாக, தெருத்தெருவாக சென்று மக்களை சந்தித்து ஓட்டு கேட்கிறது. வேறெந்த கட்சியாவது அப்படி ஓட்டு கேட்கிறதா? ஏன் கேட்கவில்லை? இருட்டுக்குள் திருட்டு கோழி பிடிப்பது போல், தேர்தலின் கடைசி இரண்டு நாட்களில் காசு கொடுத்து ஓட்டுகளை பெற்று விட நினைக்கிறார்கள். இந்த கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்ததால், பல்வேறு சிக்கல்களை அனுபவித்து வருகிறோம். தமிழகத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் மதுபோதையில் தான் செய்கின்றனர். அப்படியானால், டாஸ்மாக் கடைகளை ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக திருப்பூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, பெருந்துறை புது பஸ் ஸ்டாண்டில் சீமான் ஓட்டு சேகரித்து பேசினார்.

