/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
4 தொகுதிகளுக்கு கூடுதலாக 1,332 இ.வி.எம்., அனுப்பிவைப்பு
/
4 தொகுதிகளுக்கு கூடுதலாக 1,332 இ.வி.எம்., அனுப்பிவைப்பு
4 தொகுதிகளுக்கு கூடுதலாக 1,332 இ.வி.எம்., அனுப்பிவைப்பு
4 தொகுதிகளுக்கு கூடுதலாக 1,332 இ.வி.எம்., அனுப்பிவைப்பு
ADDED : ஏப் 02, 2024 04:35 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கூடுதல் வேட்பாளர்களால், நான்கு சட்டசபை தொகுதிக்கு கூடுதலாக, 1,332 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம்.,) அனுப்பி வைக்கும் பணி நேற்று துவங்கியது.
ஈரோடு, மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 2,222 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இவற்றுக்கு தேவையான இயந்திரங்கள் தவிர, 20 சதவீத மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், 30 சதவீத வி.வி.பேட் சேர்த்து அந்தந்த தொகுதிக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எட்டு தொகுதிக்கும் சேர்த்து, தலா, 2,663 ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், 2,885 வி.வி.பேட் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், ஈரோடு மற்றும் நீலகிரி லோக்சபா தொகுதிகளில், கூடுதலாக வேட்பாளர் போட்டியிடுவதால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் கூடுதலாக இ.வி.எம்., - வி.வி.பேட் அனுப்பும் பணி நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா தலைமையில், அரசியல் கட்சியினர் முன்னிலையில், அந்தந்த தொகுதிக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவங்கியது.
இதுகுறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், 31 வேட்பாளர்கள் உள்ளதால், 2 இ.வி.எம்., பயன்படுத்தப்படுகிறது. ஒரு இ.வி.எம்.,ல், 16 வேட்பாளரும், மற்றொன்றில் கடைசி இடத்தில் நோட்டோவும் ஒதுக்கப்படுகிறது. அதுபோல, நீலகிரி தொகுதியிலும் அதிக வேட்பாளர்கள் உள்ளதால், 2 இ.வி.எம்., பயன்படுத்தப்படுகிறது.
முதற்கட்டமாக அந்தந்த தொகுதியில், ஒரு இடத்துக்கு தேவையான இ.வி.எம்., அனுப்பி உள்ளோம். தற்போது ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி மற்றும் பவானிசாகர் என நான்கு தொகுதிகளுக்கு மட்டும், 1,111 இ.வி.எம்.,கள், 20 சதவீத கூடுதல் இ.வி.எம்., என, 221 சேர்ந்து, 1,332 இயந்திரங்கள் அனுப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

