/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சமரச தீர்வு மையம்:பவானியில் திறப்பு
/
சமரச தீர்வு மையம்:பவானியில் திறப்பு
ADDED : ஏப் 09, 2024 01:57 AM
பவானி;பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சமரச தீர்வு மைய திறப்பு விழா நேற்று நடந்தது.
சார்பு நீதிபதி முனிராஜா தலைமையில், நீதித்துறை நடுவர்கள் பரத்குமார், விஜயன் முன்னிலை வகித்தனர். 'இந்த மையம் மூலம், சட்டத்துக்கு புறம்பாக வெளியில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்து குறையும். விரைவான சமரசமான பாரபட்சமற்ற தீர்வு ஏற்படும். குடும்ப நல வழக்குகள் எளிதில் பேசி தீர்த்து வைக்கப்படும். விவாகரத்து குறையும். தற்போதைய சூழலில் கோர்ட்டுகளில் வழக்குகள் அதிகளவில் தேங்குவதால், நீதிக்கான கால தாமதத்தை தவிர்க்க சமரச தீர்வு மையம் கண்டிப்பாக தேவை. இந்த சமரச தீர்வு மையத்தின் மூலம் கோர்ட் மீதும், நீதிபதிகள், வக்கீல்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்' என்று, தீர்வு மையத்தை துவக்கி வைத்த சார்பு நீதிபதி முனிராஜா பேசினார்.பவானி வக்கீல் சங்க தலைவர் முத்துசாமி, அரசு வக்கீல் விஜயகுமார், சமரச தீர்வு மைய தீர்வர்கள் தேன்மொழி, ஆண்டவன், குணசேகரன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

