/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரேஷனில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் தாராபுரம் பகுதியில் த.மா.கா., வேட்பாளர் உறுதி
/
ரேஷனில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் தாராபுரம் பகுதியில் த.மா.கா., வேட்பாளர் உறுதி
ரேஷனில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் தாராபுரம் பகுதியில் த.மா.கா., வேட்பாளர் உறுதி
ரேஷனில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் தாராபுரம் பகுதியில் த.மா.கா., வேட்பாளர் உறுதி
ADDED : ஏப் 16, 2024 01:30 AM
ஈரோடு;ஈரோடு லோக்சபா தொகுதி பா.ஜ., கூட்டணி த.மா.கா., வேட்பாளர் பி.விஜயகுமார் நேற்று, தாராபுரம், மூலனுார் பகுதியான அலங்கியம், வெள்ளகவுண்டன்வலசு, மணக்கடவு, துலுக்கனுார், எழுகாம்வலசு, வடுகபட்டி, மாமரத்துப்பட்டி, ஊத்துார், மூலனுார், புதுப்பை மதுக்காம்பாளையம் பிரிவு உட்பட, 60க்கும் மேற்பட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். த.மா.கா., பொது செயலாளர் விடியல் சேகர், பா.ஜ., மாவட்ட தலைவர் மங்களம் ரவி, ஒன்றிய தலைவர் கருப்புசாமி, பழனிசாமி முன்னிலை வகித்தனர்.
சைக்கிள் சின்னத்துக்கு ஓட்டுக்கேட்டு அவர் பேசியதாவது:தாராபுரம் பகுதி வளர்ச்சிக்காக, திருமூர்த்தி அணையின் உபரி நீரை, உப்பாறு அணைக்கு கொண்டு வந்து, 6,500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற வழி செய்வேன். ஆணைமலையாறு - நல்லாறு திட்டத்தை மீட்டெடுப்பேன்.
மூலனுார் பகுதியில் முருங்கை சாகுபடியும், கண்வலி கிழங்கு (செங்காந்தழ்) சாகுபடி அதிகமாக உள்ளது. இவற்றுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், மூலனுார், வெள்ளகோவில் பகுதியிலேயே முருங்கை பவுடர் உற்பத்திக்கான ஆலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
வெளிநாடுகளில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்து ரேஷன் கடைகளில் வழங்குவதை தடுத்து நிறுத்தி, இப்பகுதியில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி, நடவடிக்கை எடுப்பேன். கிடைக்கும்.
இவ்வாறு பேசினார்.
த.மா.கா., வட்டார தலைவர் காளிதாஸ், நகர தலைவர் கே.பி.சுப்பிரமணியம், பார்த்தசாரதி, சுப்பு, பெரியசாமி, தமிழ்செல்வன், கார்த்திகா, கார்த்திகேயன், சத்தியபிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.

