/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவிலில் அன்னதானம் அளிக்க சான்றிதழ் கட்டாயம்
/
கோவிலில் அன்னதானம் அளிக்க சான்றிதழ் கட்டாயம்
ADDED : ஏப் 06, 2024 03:53 AM
ஈரோடு: ஈரோடு மாநகர், மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இனி அன்னதானம் அளிக்க விரும்பும் பக்தர்கள், உணவு பாதுகாப்பு துறையிடம் சான்றிதழ் பெற்றால்தான் வழங்க முடியும். இதுகுறித்து
ஹிந்துசமய அறநிலையத்துறை
அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவில்களில் பக்தர்கள் அன்னதானம் வழங்கும் முன், கட்டாயம் உணவு பாதுகாப்பு துறை மூலம் அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்களில் செயல்படும் சமையல் கூடத்துக்கும், உணவு பாதுகாப்பு துறை அனுமதி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறியதாவது: கோவில்களில் வழங்கப்படும் அன்னதானத்தால், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், யார் வழங்கியது என்பதை கண்டறியவே, அனுமதி சான்றிதழ் பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில், 100 ரூபாய் செலுத்தி, அனுமதி சான்றிதழ் பெறலாம்.
இவ்வாறு கூறினர்.

