/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமைச்சருக்கு கறுப்புக்கொடி; தாராபுரம் அருகே வாக்குவாதம்
/
அமைச்சருக்கு கறுப்புக்கொடி; தாராபுரம் அருகே வாக்குவாதம்
அமைச்சருக்கு கறுப்புக்கொடி; தாராபுரம் அருகே வாக்குவாதம்
அமைச்சருக்கு கறுப்புக்கொடி; தாராபுரம் அருகே வாக்குவாதம்
ADDED : ஏப் 02, 2024 04:37 AM
தாராபுரம்: ஈரோடு லோக்சபா தி.மு.க., வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி உள்ளிட்டோர், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம், ருத்ராவதி, மேட்டுக்கடை, எரகாம்பட்டி பகுதிகளில் நேற்று ஓட்டு சேகரித்தார். தாராபுரம்-பூளவாடி சாலையில் கெத்தல்ரேவ் பகுதிக்கு திறந்த வேனில் சென்றனர். அங்கு திரண்டிருந்த, 50க்கும் மேற்பட்ட மக்கள், அமைச்சர் கார், வேட்பாளர் சென்ற வேனை கறுப்பு கொடி ஏந்தியவாறு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
முற்றுகையிட்ட மக்களில் இருந்த விவசாயிகள், 'உப்பாறு அணைக்கு தண்ணீர் கேட்டு போராடியபோது, எங்கள் கோரிக்கை உங்கள் காதில் விழவில்லை, இப்போது ஓட்டுப்போட மட்டும் நாங்கள் வேண்டுமா?' என்று கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., கூட்டணி கட்சியினரின் சமாதான முயற்சி எடுபடாததால், வேறு வழியின்றி அங்கிருந்து வேட்பாளருடன் நடையை
கட்டினர்.

