/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்; 4 பேர் கைது
/
வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்; 4 பேர் கைது
ADDED : ஏப் 17, 2024 01:46 AM
ஈரோடு:ஈரோடு,
சூரம்பட்டி வலசு, மாருதி காம்ப்ளக்ஸை சேர்ந்தவர் சந்தோஷ் குமார், 25;
முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட்-1 அணைக்கட்டு அருகே நண்பர்களுடன்
அமர்ந்து பேசி கொண்டிருந்தார். மணல் மேட்டை சேர்ந்த அஜித்குமார், 23,
பிரேம்நாத், 23, சிபிராஜ், 22, மற்றும் சஞ்சய், 19 ஆகியோர் போட்டோ
எடுத்து கொண்டிருந்தனர்.
அவர்களிடம் சந்தோஷ்குமார், சற்று
தள்ளி சென்று போட்டோ எடுக்கும்படி கூறியதால், இருதரப்பினருக்கும்
வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நால்வரும் தகாத வார்த்தை பேசி,
கட்டை, கற்களால் சந்தோஷ் குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து
சென்றனர். அவரது புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார்
வழக்குப்பதிந்து அஜித்குமார் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது
செய்தனர்.

