/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
யானையை வைத்து யாசகம்: நடவடிக்கை கோரி முறையீடு
/
யானையை வைத்து யாசகம்: நடவடிக்கை கோரி முறையீடு
ADDED : மே 17, 2024 04:16 AM
ஈரோடு: கொடுமுடி வீரநாராயண பெருமாள் கோவிலில் யானையை துன்புறுத்தி யாசகம் பெறும் நபர் மீது, நடவடிக்கை கோரி, இந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிேஷார்குமார், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்துள்ளார்.
அவரது மனுவில் கூறியதாவது: கொடுமுடி மகுடேஸ்வரர் - வீரநாராயண பெருமாள் கோவிலுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் அருகேயும், சுற்றுப்பகுதியிலும், காவிரி படித்துறையிலும் அப்துல் என்பவர், யானையை வைத்து ஆசீர்வாதம் வழங்குவதாக கூறி யாசகம் பெற்று வருகிறார். இந்த யானைக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பங்குனி உத்திர திருவிழாவின்போது, மதம் பிடித்து பாகன் கட்டுப்பாட்டை மீறி பக்தர்கள் கூட்டத்துக்கு சென்று பிரச்னையானது. இதுபற்றி விசாரித்து, யானையை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

