/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சம்பளம் கேட்டு 'வெட்டு'தப்பிய தொழிலாளி கைது
/
சம்பளம் கேட்டு 'வெட்டு'தப்பிய தொழிலாளி கைது
ADDED : ஏப் 10, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்;அந்தியூர், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத்குமார், 42; கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்கிறார்.
இதற்காக இவரிடம் பலர் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு ஜீவா செட் சாலையில் நடந்து சென்றார். அப்போது இவரிடம் வேலை செய்யும் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி, 62, வந்தார். சம்பள பணத்தை தர மாட்டாயா? எனக்கேட்டு, மறைத்து வைத்திருந்த அரிவாளால், சம்பத்குமாரை முழங்கையில் வெட்டிவிட்டு, கொலை மிரட்டலும் விடுத்து ஓட்டம் பிடித்தார். சம்பத்குமார் புகாரின்படி கந்தசாமியை, அந்தியூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

