/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் தொகுதியில் 9 பூத்கள் பதற்றமானவை
/
பவானிசாகர் தொகுதியில் 9 பூத்கள் பதற்றமானவை
ADDED : ஏப் 07, 2024 03:51 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் சட்டசபை தொகுதி, நீலகிரி லோக்சபா தொகுதியில் வருகிறது. இந்நிலையில் பவானிசாகர் சட்டசபை தொகுதி விவரங்கள் குறித்தும், தேர்தல் தொடர்பான பணி விவரங்கள் குறித்து ஆய்வு கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். நீலகிரி லோக்சபா தொகுதி பொது மேற்பார்வையாளர் மஞ்சித் சிங் ப்ரார், நீலகிரி லோக்சபா தொகுதி செலவின மேற்பார்வையாளர் சந்தீப் குமார் மிஸ்ரா முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: பவானிசாகர் சட்டசபை தொகுதியில், இரண்டு லட்சத்து, 60 ஆயிரத்து, 384 வாக்காளர் உள்ளனர். இவர்கள் ஓட்டளிக்க, 295 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்பது ஓட்டுச்சாவடிகள் சமூக மற்றும் பொருளாதார காரணிகளால் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. 146 ஓட்டுசாவடிகளில் இணையதளம் மூலம் ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எஸ்.பி., ஜவகர், கூடுதல் கலெக்டர் டாக்டர் மணிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், பவானிசாகர் பயிற்சி நிறுவன முதல்வர் லதா, வனத்துறை, வணிகவரித்துறை அலுவலர்கள், முன்னோடி வங்கி மேலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

