ADDED : மார் 09, 2025 01:35 AM
அ நிறம் | அளவு
ரூ.6.79 லட்சத்துக்குவிளை பொருட்கள் ஏலம்
பவானி:பவானி அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 76 மூட்டை எள் வரத்தாகி, வெள்ளை எள் ரகம் ஒரு கிலோ, 135 முதல் 142 ரூபாய், சிவப்பு ரகம் கிலோ, 112 முதல் 133 ரூபாய், கருப்பு ரகம் கிலோ, 164 ரூபாய்க்கு விற்பனையானது. ஆறு மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி, கிலோ, 78 முதல், 144 ரூபாய், 1,165 தேங்காய் வரத்தாகி, காய் ஒன்று, 19 முதல் 30 ரூபாய், இரண்டு மூட்டை துவரை வரத்தாகி கிலோ, 73 முதல் 74 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றைய வர்த்தகத்தில், 6.79 லட்சத்துக்கு வேளாண் விளை பொருட்கள் ஏலம் போனது.
