/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானியில் 5ம் நனைப்புக்கு தண்ணீர் கோரி 5ல் முற்றுகை
/
கீழ்பவானியில் 5ம் நனைப்புக்கு தண்ணீர் கோரி 5ல் முற்றுகை
கீழ்பவானியில் 5ம் நனைப்புக்கு தண்ணீர் கோரி 5ல் முற்றுகை
கீழ்பவானியில் 5ம் நனைப்புக்கு தண்ணீர் கோரி 5ல் முற்றுகை
ADDED : ஏப் 01, 2024 04:05 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் நீர் இறுப்பு குறைவாக உள்ள நிலையில், கீழ்பவானி பாசனம், 2ம் போகத்துக்கு 5 நனைப்புக்கு மட்டும் தண்ணீர் விட அதிகாரிகள் அறிவிப்பு செய்தனர். அதேநேரம், பிற பாசனங்களுக்கு தண்ணீர் திறந்ததற்கு, கீழ்பவானி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தற்போது 4ம் நனைப்புக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும், 5 வரை தண்ணீர் செல்ல வேண்டும். ஆனால், 3ம் தேதியே நிறுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 5ம் நனைப்புக்கு தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க கூட்டம், ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, சுதந்திரராசு, வெங்கடாசலம், செங்கோட்டையன் முன்னிலையில், ஈரோடு அருகே நேற்று நடந்தது.
கீழ்பவானியில், 5ம் நனைப்புக்கு கட்டாயமாக தண்ணீர் திறக்க வேண்டும். இதை வலியுறுத்தி வரும், 5 ல் ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்துள்ளனர்.

