/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
/
ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
ADDED : ஏப் 21, 2024 07:19 AM
திருப்பூர் : திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையம், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மையம், ஓட்டுப்பதிவான இயந்திரங்களை வைக்கும், 'ஸ்ட்ராங் ரூம்'கள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்லுாரி வளாகத்தில், கூடுதல் மின் விளக்குகள் பொருத்தி இரவில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'ஸ்ட்ராங் ரூம்'களுக்குள், தலா நான்கு, நடைபாதை என, கல்லுாரி வளாகத்தில், 260 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து கேமரா பதிவுகளையும் கண்காணிக்க, கட்டுப்பாட்டு அறைகள் அறைக்கப்பட்டுள்ளன. தனியே போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலக பாதுகாப்பு போலீசாரின் கட்டுப்பாட்டில், 'ஸ்ட்ராங் ரூம்'கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கல்லுாரி வளாகத்தின், நான்கு புறமும், 'வாட்ச் டவர்' அமைத்து, போலீசார் 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 தொகுதிக்கு 8 'ஸ்ட்ராங் ரூம்'நிர்வாக பிரிவு இயங்கும் பிரதான கட்டடத்தில், திருப்பூர் வடக்கு தொகுதிக்கும், அதன் பின்புறம் உள்ள, தென்மேற்கு கட்டடத்தில் திருப்பூர் தெற்கு தொகுதிக்கும் 'ஸ்ட்ராங் ரூம்' மற்றும் ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 'ஸ்ட்ராங் ரூம்' அமைந்துள்ள அறை; அந்த கட்டடம், ஒட்டுமொத்த கல்லுாரி வளாகத்தின் உள்ளே, வெளியே என, போலீசாரின் நான்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

